Show all

அந்தமான்; உட்பட 50 இடங்களுக்கு 1,777 ரூபாயில் ஏர் இந்தியாவில் பயணிக்கலாம்

ஏர் இந்தியா நிறுவனம் உள்ளநாட்டு விமான பயணத்துக்கான கட்டணச் சலுகையை அறிவித்துள்ளது.

இதன்படி 1,777 ரூபாயில் இனி உள்நாட்டுக்குள் விமானத்தில் பறக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கட்டணச் சலுகை வரும் 2016ம் ஆண்டு ஜனவரி 15ம் தேதி முதல் ஏப்ரல் 15ம் தேதி வரையிலான காலகட்டத்துக்குள்ளான பயணத்துக்கு மட்டுமே பொருந்தும்.

இம்மாதம் 7ம் தேதி முதல் பயணச்சீட்டு முன்பதிவு செய்து கொள்ளலாம், நாட்டின் வடகிழக்கு, லடாக், அந்தமான் நிக்கோபார் தீவுகள் உட்பட 50 இடங்களுக்கு, இத்திட்டம் உள்ளடக்கியது என ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.