Show all

செவ்வாய் கிரகத்தில் உருளைக்கிழங்கு பயிரிட ‘நாசா’ முடிவு

ஆளில்லாப் பயணங்களின் மூலம் திரட்டப்பட்ட நிலவுஇயல் சான்றுகள், ஒரு காலத்தில் செவ்வாயில் பெருமளவு நீர் இருந்தது என்பதைக் தெரிவித்தது.

பீனிக்சு இறங்குகலம் அனுப்பிய தகவல்கள், செவ்வாயின் மண் காரத்தன்மை கொண்டது எனவும், மக்னீசியம், சோடியம், பொட்டாசியம், குளோரைடு போன்ற தனிமங்களைக் கொண்டது எனவும் காட்டுகின்றன. புவியிலுள்ள தோட்டங்களில் காணப்படும் இவை தாவர வளர்ச்சிக்கு இன்றியமையாதவை. இறங்குகலச் சோதனைகளின் படி மண் பி.எச் 8.3 கொண்டதுடன், பேர்குளோரேட்டு உப்புக்களையும் கொண்டது எனத் தெரிகிறது.

 

அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் அங்கு உயிரினங்கள் வாழ முடியுமா என்று ஆய்வு நடத்தி வருகிறது. இதற்கிடையே 2030-ம் ஆண்டில் அங்கு பொதுமக்களை குடியமர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் செவ்வாய் கிரகத்தில் உருளைக்கிழங்கு பயிரிட ‘நாசா’ முடிவு செய்துள்ளது. அதற்கான ஆய்வு பெருநாட்டின் தலைநகரமான லிமாவில் நடக்கிறது.

 

லிமாவில் உள்ள சர்வதேச உருளைக்கிழங்கு மையத்தின் உதவியுடன் மார்ச் மாதம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

 

முதலாவதாக செவ்வாய் கிரக தட்ப வெப்ப நிலையில் பூமியில் உருளைக்கிழங்கு பயிரிட்டு சோதனை நடத்தப்படுகிறது. இதற்கான தட்ப வெப்ப நிலை மற்றும் சுற்றுச் சூழல் அமையும் விதத்தில் மிகப்பெரிய கூண்டு அமைத்து அதில் காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகிறது.

 

அதற்காக தற்போது 4500 ரகங்களில், 100 விதமான உருளைக் கிழங்கு வகைகள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளன. இவற்றை பயிரிடுவதற்காக லிமாவில் 40 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு இறுதியில் ஆன் டெஸ் மலைப் பகுதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.