Show all

என்னங்கடா இது, தமிழகத்திற்கு வந்த சோதனை! ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்த அறிவிப்புக்கே ஆண்டு விழாவா

17,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: 'யுத்தம் செய் ; ஜெயிச்சா நாடாளுவே, தோத்தா வீர சொர்க்கத்துக்கு போவே. யுத்தம் செய்ய மாட்டேன்னு போயிக்கிட்டே இருந்தா உன்னை கோழைனு சொல்லுவார்கள்' கீதையில் கிருஷ்ணர் சொன்னதாக ரஜினி கடந்த ஆண்டு  சொன்ன வாசகங்கள் இவை. இந்த வாசகங்களைச் சொல்லி ஓராண்டு ஆகிவிட்ட நிலையில் அவை ரஜினிக்கே கச்சிதமாகப் பொருந்தி நிற்கின்றன என்கிறார்கள் விரக்தியில் இருக்கும் ரசிகர்கள்.

அமைப்போ, நிறுவனமோ, அரசியல் கட்சியோ தொடங்கினால் அதன் ஓராண்டு நிறைவை விழாவாகக் கொண்டாடுவார்கள். அந்த வகையில் ரஜினி மக்கள் மன்றத்தினர் ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்த அறிவிப்புக்கே ஆண்டு விழா கொண்டாட வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு சென்னையிலுள்ள ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்களைச் சந்தித்த ரஜினி, 'நான் அரசியலுக்கு வருவது உறுதி. சட்டமன்றத் தேர்தல் வருவதற்கு முன்னதாக கட்சி தொடங்கப் போறது உறுதி' என்று அறிவித்தார். அது ரஜினி ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்தது.

ரஜினி அறிவிப்புக்கு ஓராண்டு முடிந்துவிட்ட நிலையில் இன்று வரை ரஜினியிடம் இருந்து அடுத்தகட்டத்துக்கான அடி பெயர்ப்பு என சொல்லக் கூடிய உறுதியான நடவடிக்கை ஏதுமில்லை. இதனால் ரசிகர்கள் ஏமாற்றத்தில் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் இன்று அமெரிக்காவில் இருக்கிறார் ரஜினி. அவர் கட்சி தொடங்குவாரா, இல்லையா என்ற அளவுக்கு ரசிகர்களின் நம்பிக்கை குறைந்துகொண்டே வருகிறது என்பதுதான் உண்மை.

மிதிவண்டி கேட்ட மகனை, முதலில் மிதிவண்டி ஓட்ட கத்துக்க என்று சொன்ன அப்பா போல- முதலில் எல்லா ஊரிலும் எல்லா தெருவிலும் ரஜினி மக்கள் மன்றங்களை அமைக்கணும்னு அறிவிச்சார் ரஜினி. 

இந்த ஒரு ஆண்டில் ரஜினிக்கு காலா, 2.0 படங்கள் வெளியாகிடுச்சு. பேட்ட படத்தை முடிச்சிட்டாரு. ஆனால் ரசிகர்கள்தான் இருக்கிற மத்த வேலைகளை விட்டுட்டு ரஜினி மக்கள் மன்றத்துக்காக ஒர் ஆண்டா உழைச்சுக்கிட்டிருக்கோம். என்ன பண்ணுவாருன்னே தெரியலையே? என்கிறார்கள் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் சிலர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,019.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.