Show all

நிறைவான வருமானம் தருமா! குறைந்த வரவு செலவுத் திட்டத்தில், 21 நாட்களில் உருவான படம் அமுதா

25,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: புதுமுக இயக்குனர் பி.எஸ்.அர்ஜுன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் அமுதா திரைப்படம் குறைந்த வரவு செலவுத் திட்டத்தில் 21 நாட்களில் முடித்திருக்கிறார்கள்.

திகில் நிறைந்த இத்திரைப்படம் 21 நாட்களில் படமாக்கப்பட்டுள்ளது. ஒரு கொலை அதை சுற்றி நடக்கிற மர்மமான நிகழ்வுகள், யார் கொலையாளி, எதற்காக இந்த கொலை நடக்கிறது என்கிற புதிரான திரைக்கதையில் உருவாக்கியுள்ளார் இயக்குனர்.

அருண் கோபன் இசையமைத்துள்ள இப்படத்தில் மூன்று பாடல்கள் உருவாகியுள்ளது. இதில், ஜெயச்சந்திரன், சித்ரா மற்றும் வினித் சிறினிவாசன் ஆகியோர் பாடியிருக்கிறார்கள். 

மூன்று வித கதையோட்டத்தில் விறுவிறுப்பான ஒரு திகில் படத்தை ரூ.50 இலட்சம் வரவு செலவுத் திட்டத்தில் படமாக்கியிருக்கிறார்கள். இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,968. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.