Show all

அம்மாடியோவ்! சிறுசிறு எழுத்து மாற்றங்களுடன் தமிழ் ராக்கர்சுக்கு இரண்டாயிரம் இணையத் தளங்கள் உள்ளனவாம்

12,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படத்தை தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட இணையதளங்களில் வெளியிட தடை விதித்து  சென்னை உயர்அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இயக்குநர் சங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 திரைப்படம் நாளை உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ளது. இந்நிலையில்  லைகா நிறுவனம் சார்பில் சென்னை உயர்அறங்கூற்றுமன்றத்தில் மனு ஒன்று பதிகை செய்யப்பட்டது.

அதில், மிகப்பெரிய வரவு செலவுத் திட்டத்தில்  தயாரிக்கப்பட்டுள்ள 2.0 படத்தை  முறைகேடாக 12 ஆயிரத்து 567 இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக 'தமிழ் ராக்கர்ஸ்' என்ற இணையதளம், தன்னுடைய  இணைய தள முகவரியில் உள்ள  எழுத்துகளை மாற்றம் செய்து தொடர்ச்சியாக புதிய படங்களை  இணையத்தில் வெளியிட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த மனு அறங்கூற்றுவர் சுந்தர் முன்பு  விசாரணைக்கு வந்தபோது, புதிய திரைப்படங்களை இணைய தளங்களில் வெளியிட கூடாது என பல முறை அறங்கூற்றுமன்றம்  உத்தரவிட்டாலும், அந்த உத்தரவை சுட்டிக்காட்டியே 'தமிழ் ராக்கர்ஸ்' சவால் விட்டு புதிய படங்களை வெளியிட்டு விடுவதாக லைகா நிறுவனம் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

இதை கேட்ட அறங்கூற்றுவர், இணைய தள முகவரியில் மாற்றம் செய்து தமிழ் ராக்கர்சுக்கு சொந்தமான  சுமார்  2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இணையதளங்கள் உட்பட, 12 ஆயிரத்து 567 இணையதளங்களில் 2.0 படத்தை வெளியிட தடை விதித்து இணையதள சேவை  நிறுவனங்களுக்கு உத்தரவிட்டார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,69,985.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.