Show all

நடிகை ஓவியா கீச்சுப்பதிவு! 90எம்எல் பட வெளியீடு அன்று ரசிகர்களை அதிகாலை சந்திக்கவுள்ளதாக

01,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: 90எம்எல் பட வெளியீடு  அன்று ரசிகர்களை அதிகாலை சந்திக்கவுள்ளதாக நடிகை ஓவியா அறிவித்துள்ளார். 

களவாணி படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை ஓவியா. இருந்தாலும் இவருக்கு தனியாக ரசிகர் பட்டாளம் அப்போது உருவாகவில்லை. இந்நிலையில் தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம், ஓவியாவிற்கு பெரும் இரசிகர் வட்டம் உருவானது. 

இந்நிலையில் ஓவியா நடித்துள்ள 90எம்எல் படம் அடுத்த வெள்ளிக்கிழமை யன்று வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு, நடிகர் சிம்பு இசையமைத்துள்ளார். இந்த படத்துக்கு 18அகவை குறைந்தோர் பார்க்க அனுமதியில்லை என்கிற சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதனால் இந்தப் படம் குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.

இந்நிலையில் படம் வெளியாகும் நாள் அன்று, அதிகாலை காட்சியில் ரசிகர்களை சந்திக்க உள்ளதாக நடிகை ஓவியா தனது கீச்சுப் பக்கம் மூலம் தெரிவித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஓவியா பங்கேற்கும் நிகழ்ச்சியில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இவரின் வருகை 90எம்எல் படத்துக்கு அதிக ரசிகர் கூட்டம் வரும் என படக்குழுவினர் எதிர்பார்க்கின்றனர். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,062.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.