Show all

நடிகர் விசால் திருமணம்! மணப்பெண் அனிசாவின் புகைப்படம் தெலுங்கு இணையதளங்களில் கசிவு

28,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: விசால், நடிகர் சங்க பொதுச்செயலாளராகவும், தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். தமிழில் முன்னணி நடிகராக இருக்கிறார். அரசியல் கருத்துகளை வெளியிட்டு பாராட்டும், குட்டுக்களும் வாங்கி வருபவர்.

அவருக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர்.

இந்தநிலையில் விசாலுக்கும் ஆந்திராவை சேர்ந்த அனிசா என்ற பெண்ணுக்கும் காதல் மலர்ந்துள்ளது. அனிசா ஐதராபாத்தை சேர்ந்த தொழில் அதிபர் விஜய் ரெட்டி-பத்மஜா தம்பதியின் மகள் ஆவார். அவரது புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது. இவர்கள் திருமணம் விரைவில் நடக்க உள்ளது. அனிசாவின் புகைப்படம் தெலுங்கு இணையதளங்களில் வெளியாகி உள்ளது.

விஷால் கூறியதாவது: 'எனக்கும் அனிசாவுக்கும் இந்த ஆண்டு திருமணம் நடைபெறும். நாங்கள் இருவரும் ஒரு நிகழ்ச்சியில் சந்தித்து காதல் வயப்பட்டோம். எங்கள் காதல் விவகாரம் நெருக்கமான சிலருக்கு தெரிந்து விட்டது. இருவீட்டு பெற்றோர்களும் பேசி திருமண நாளை முடிவு செய்வார்கள். நடிகர் சங்க கட்டிடத்தை கட்டியபிறகுதான் திருமணம் செய்து கொள்வேன் என்று ஏற்கனவே கூறி இருந்தேன். அந்த முடிவில் மாற்றம் இல்லை. எனது திருமணம் சென்னையில் நடைபெறும்.'

மேலும் தனது கீச்சுப் பக்கத்தில், 'எனது திருமணம் பற்றி தவறான தகவல்கள் பரவுகின்றன. இது எனது சொந்த வாழ்க்கை. எனது திருமணம் பற்றி நானே அதிகாரப்பூர்வமாக அறிவிப்பேன்' என்றும் குறிப்பிட்டு உள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,030.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.