Show all

நடிகர் சங்கத்துக்கு ரூ.26 கோடியில் புதிய கட்டடம் கட்ட உறுப்பினர்களின் ஒப்புதல்

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு ரூ.26 கோடியில் புதிய கட்டடம் கட்ட நடிகர் சங்க பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 62-ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது.

சங்கத்தின் தலைவர் நாசர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர்கள் பொன்வண்ணன், கருணாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..

நிகழ்ச்சியில் பழம்பெரும் நடிகர் பி.யு.சின்னப்பா குடும்பத்தினருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரது நூற்றாண்டு விழா காணொலியும் நடிகர் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்த காணொலியும் வெளியிடப்பட்டன. நடிகர் சங்கத்தின் கையேடு மற்றும் இணையதளம் வெளியிடப்பட்டது.

 

நாடகத்துறையில் பல ஆண்டுகளாக பங்களிப்பை அளித்து வரும் கலைஞர்களுக்கு சங்கரதாஸ் சுவாமிகள் நினைவு விருதும், பொற்கிழியும் வழங்கப்பட்டன.

2014-15-ம் ஆண்டுக்கான ஆண்டறிக்கை மற்றும் தணிக்கை செய்யப்பட்ட வரவு-செலவு கணக்கு சமர்பிக்கப்பட்டது. சங்கத்தின் எதிர்கால பொருளாதார நலத்திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

 

நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டடம் கட்டுவது முடிவு எடுக்கப்பட்டது. அதன் படி ரூ.26 கோடியில் புதிய கட்டடம் கட்டுவது குறித்து உறுப்பினர்களின் ஒப்புதல் பெறப்பட்டது.  கட்டடத்தின் மாதிரி வடிவத்தை வசன கர்த்தா ஆரூர் தாஸ், நடிகர் சிவகுமார் உள்ளிட்டோர் வெளியிட்டனர்.

 

சூர்யா, வடிவேலு, செந்தில், விஷ்ணு, விஜய் சேதுபதி, ஜெயம் ரவி, விமல், மயில்சாமி, லதா, நளினி, ரேகா, தியாகு, சூரி, மனோபாலா, பாண்டியராஜன், ஷாம் உள்ளிட்ட நடிகர்கள் பங்கேற்றனர். நடிகைகள் சுகன்யா, நளினி, கோவை சரளா, சங்கீதா, லலிதா குமாரி, ரோகிணி உள்ளிட்ட நடிகைகள் கலந்து கொண்டனர்.

 

நாசர் தலைமையிலான நிர்வாகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் என்பதால், முன்னணி நட்சத்திரங்கள் இதில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முன்னணி நடிகர்கள் யாரும் பங்கேற்கவில்லை

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.