Show all

அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் நடிகை நக்மா புதுவை வருகிறார்.

அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் நடிகை நக்மா வருகிற 20-ந் தேதி புதுவை வருகிறார்

அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளராக நடிகை நக்மா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் அவர் தமிழகம் புதுச்சேரியின் மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளராகவும் உள்ளார். அவர் தற்போது தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் நடிகை நக்மா வருகிற 20-ந் தேதி புதுச்சேரி வருகிறார். மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.

தொடர்ந்து அன்று கம்பன் கலையரங்கத்தில் நடைபெறும் மகளிர் காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் நமச்சிவாயம் சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் மத்திய மந்திரி நாராயணசாமி, சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் வைத்திலிங்கம் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், மகளிர் காங்கிரசார் கலந்து கொள்கின்றனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.