Show all

கள்ளிக்காட்டு இதிகாசம் நாவலை 23 மொழிகளில் வெளியிட சாகித்ய அகாடமி திட்டமிட்டுள்ளது.

கவிஞர் வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம் நாவலை 23 மொழிகளில் வெளியிட சாகித்ய அகாடமி திட்டமிட்டுள்ளது.

கவிஞர் வைரமுத்து எழுதி ஆனந்த விகடனில் தொடராக வெளி வந்தது, 'கள்ளிக்காட்டு இதிகாசம்' நாவல்.

வாராவாரம் வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த நாவல், வைகை அணை கட்டப்பட்டபோது அதன் நீர்தேங்கும் பரப்புக்காக காலிசெய்யப்பட்ட 14  கிராமங்களின் பூர்வ கதை ஆகும்

மண்சார்ந்த மக்கள், மண்ணோடும் வாழ்வோடும் நடத்திய போராட்டங்களை வலியோடு சொன்ன இந்த படைப்பு, அந்த மண்ணின் வட்டார வழக்கோடு எழுதப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நாவலுக்கு 2003-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. இந்நிலையில் தமிழில் வெளியான இந்த நாவலை, இந்தியா முழுவதும் மற்றும் உலகம் முழுவதும் கொண்டுசெல்ல சாகித்ய அகாடமி முயற்சி மேற்கொண்டுள்ளது.

அதன்படி ஆங்கிலம் - அஸ்ஸாமி, குஜராத்தி, இந்தி, சமஸ்கிருதம் உள்ளிட்ட 23 மொழிகளில் மொழிபெயர்க்க சாகித்ய அகாடமி முடிவெடுத்திருக்கிறது.

இது தொடர்பாக சாகித்ய அகாடமியின் செயலாளர் சீனிவாசராவ், கவிஞர் வைரமுத்துவுக்கு கடிதம் எழுதி இத்தகவலை தெரிவித்துள்ளார்.

சாகித்ய அகாடமியின் இந்த முடிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள வைரமுத்து, இந்த மொழிபெயர்ப்பு முயற்சி தமிழுக்கும், இந்திய மொழிகளுக்கும் இடையே கட்டப்படும் கலாசாரப் பாலமாகும். மொழிபெயர்ப்பு முடிந்ததும், அந்தந்த மாநிலத் தலைநகரங்களில் அறிமுக விழா நடத்தப்படும் என்றார்.  


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.