Show all

இந்து-முஸ்லிம் பரஸ்பர ஒப்புதலுடன் ராமர் கோவில் கட்டப்படும்

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப்பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்கும் என பா.ஜனதா தலைவர் சுப்பிரமணிய சாமி கூறினார். டெல்லி விஸ்வ இந்து பரிஷத் அலுவலகத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, அடுத்த 2 அல்லது 3 மாதங்களுக்குள் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப்பணிகள் தொடங்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். எனினும் இந்த ஆண்டு இறுதிக்குள் கண்டிப்பாக இந்தப் பணிகள் தொடங்கப்படும். இதற்கான செயல்திட்டம் 9-ந் தேதி வெளியிடப்படும் என்றார்.

மேலும் அவர் கூறுகையில், ராமர் கோவில் தொடர்பான வழக்கின் தீர்ப்புக்கு பின்னரே இந்த கோவில் கட்டுமானப்பணி தொடங்கும். இந்த தீர்ப்பு ஆகஸ்டு அல்லது செப்டம்பரில் வரும் என நாங்கள் நம்புகிறோம் என்று தெரிவித்தார்.

இந்து-முஸ்லிம் பரஸ்பர ஒப்புதலுடன் இந்த கோவில் கட்டப்படும் என்று கூறிய சுப்பிரமணிய சாமி, ராமர் கோவில் கட்டுவது ஒவ்வொரு இந்துவின் கடமை என்றும், இதற்கும், அடுத்த ஆண்டு நடைபெறும் உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலுக்கும் தொடர்பில்லை எனவும் கூறினார்.  


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.