Show all

இன்று ஏ.ஆர். ரஹ்மானின் 49-வது பிறந்தநாள்

இன்று ஏ.ஆர். ரஹ்மானின் 49-வது பிறந்தநாள். இதனையொட்டி சமூகவலைத்தளத்தில் ரசிகர்கள் ரஹ்மானுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

ரஹ்மானும் ரசிகர்களின் வாழ்த்துகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், 2016 முழுக்க சென்னையில்தான் இருப்பேன். இந்த ஆண்டு கௌதம் மேனன் படமும், சூர்யா படமும் ரெடி. ஷங்கரின் ‘2.0’ உள்ளது. தவிர படத் தயாரிப்பிலும் என் கவனம் அதிகமாக இருக்கும் என்று கூறியுள்ளார் ரஹ்மான்.

இந்நிலையில் சென்னை (ஜனவரி 16), கோவை (ஜனவரி 23), மதுரை (ஜனவரி 31) ஆகிய நகரங்களில் ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைக்கும் நிதியின் ஒரு பகுதி சென்னை, கடலூர் வௌ;ள நிவாரணத்துக்குச் செல்கிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.