Show all

இரசிகர்கள் மகிழ்ச்சி! தனக்கு, 'நல்ல மாப்பிள்ளை பாருங்கள்' என்று பேச்சுக்கு சொல்லி வைத்த தமன்னாவின் வேண்டுகோளால்

22,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: வேலூரில் நகை கடை திறப்பு விழாவில் நடிகை தமன்னா பங்கேற்றார். அவரது வருகையை அறிந்த ரசிகர்கள் அண்ணா சாலையில் குவிந்தனர். ரசிகர்கள் முண்டியடித்ததால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் ஆரணி சாலை வழியாக போக்குவரத்தை காவல் துறையினர் மாற்றி விட்டனர்.

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த ஆண்டின் தொடக்கத்தில் நான் நடித்த 'கண்ணே கலைமானே' படம் வெளியாகிறது. இதை அடுத்து தேவி2, மகாலட்சுமி உள்பட பல படங்கள் வெளியாக உள்ளன. நல்ல படங்களுக்கு ரசிகர்களிடம் எப்போதும் வரவேற்பு உண்டு. மக்களுக்கு பிடிக்கவில்லை என்றால் உறுதியாக அந்த படம் ஓடாது. 

திரைப்படத்தில் எனக்கு போட்டியாக யார் உள்ளார்கள் என்று கேட்டால், எல்லா துறைகளிலும் போட்டி உள்ளது. அதுபோல் தான் திரைப்படடவுலகும் ; போட்டி நல்லது தான். போட்டி காரணமாக தான் நாங்கள் நல்ல படங்களில் நடிக்க முடிகிறது.

கதைத்தலைவிக்கு முதன்மை உள்ள படங்களில் நடிப்பேன். அதை ஓரளவுக்கு தர்மதுரை படம் நிவர்த்தி செய்துள்ளது. இனி வெளியாகும் படம் இன்னும் அதை ஒரு படிக்கு மேல் கொண்டு போகும். அரசியல் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. எப்போது எனது திருமணம் என்று கேட்கிறார்கள். நீங்களே எனக்கு நல்ல மாப்பிள்ளை பாருங்கள் என்றார்.

விழா முடிந்ததும் வேலூர் அனைத்து மகளிர் காவல் துறை ஆய்வாளர் மைதிலி, தமன்னாவிடம் ஒரு கோரிக்கை வைத்தார். அதில் பொதுமக்கள் மற்றும் உங்களது ரசிகர்கள் போக்குவரத்து விதிகளை மதித்து வாகனம் ஓட்ட வேண்டும். இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார். 

அதை ஏற்றுக்கொண்ட தமன்னா, வெளியே வந்து அங்கு கூடியிருந்த ரசிகர்களிடம் வாகனம் ஓட்டும்போது தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும், காரில் இருக்கை கச்சை கட்டாயம் போட வேண்டும். போக்குவரத்து விதிகளை கடைபிடித்து வாகனம் ஓட்டினால் விபத்தை தவிர்க்கலாம் என்றார். பின்னர் அவர் தனது ரசிகர்களுடன் தம்படம் எடுத்துக் கொண்டார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,024.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.