Show all

96ல் சிறப்பாக நடித்த 'குட்டி திரிசா' கவுரிக்கு மலையாளத்தில் அழைப்பு!

28,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 படத்தில் குட்டி திரிசாவாக நடித்த கவுரி, தற்போது மலையாள படத்தில் நடித்து வருகிறார். 

விஜய் சேதுபதி, திரிசா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 96 திரைப்படம் பெரியளவில் வெற்றி பெற்றதற்கு, இளம் அகவை கதாபாத்திரங்களுக்கான நடிகர், நடிகை தேர்வும் அவர்களது கச்சிதமான நடிப்பும் காரணமாக அமைந்தது என்று சொன்னால் மிகையாகாது. 

ஆதித்யா பாஸ்கரும் கவுரி கிசனும் விஜய்சேதுபதியாக, திரிசாவாக மாறி நடித்திருந்தனர். இருவரும் தமிழ் திரையுலகில் அடுத்தடுத்து பல படங்களில் ஒப்பந்தமாகி நடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ள நிலையில் கவுரி கிசனை மலையாள திரையுலகம் அழைத்துள்ளது.

துசார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் பிரின்ஸ் ஜாய் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் கவுரிக்கு கதைத்தலைவனாக சன்னி வேயின் நடிக்கிறார். 'அனுகிரஹித்தன் அந்தோனி' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பில் கவுரி கிசன் இணைந்துள்ளார். இதனை கவுரி கிசன் உறுதி படுத்தியுள்ளார். இந்தப் படத்தை கோடை விடுமுறையை முன்னிட்டு வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,059.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.