Show all

2.0 இன்று காலை 4 மணிக்கே திரையிடப்பட்டது!

13,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், மற்றும் எமி ஜாக்சன் உள்ளிட்ட பிரபலங்கள் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் 2.0. முப்பரிமாணத் தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. 

இப்படத்தின் சிறப்பு காட்சிகள் இன்று காலை 4 மணிக்கு திரையிடப்பட்டது. அப்போது ரசிகர்கள் ரஜினியின் வெட்டுப்படத்திற்கு பாலாபிசேகம் செய்து உற்சாகத்தை வெளியப்படுத்தினர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,69,986.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.