Show all

இறந்து கிடந்த 145 திமிங்கிலங்கள்! நியூசிலாந்து தீவில் அதிர்ச்சி

13,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: நியூசிலாந்தில் உள்ளது ஸ்டீவர்ட் என்னும் சிறிய தீவு. இங்கு 375 மக்கள் மட்டுமே வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று அந்த வழியாகச் சென்ற சுற்றுலாப் பயணி ஒருவர் திமிங்கிலங்கள் கரை ஒதுங்கி இருப்பதைப் பார்த்துள்ளார். அந்தத் தீவின் கடற்கரையில் சுமார் 2 கி.மீ தூரத்துக்கு இந்த திமிங்கிலங்கள் கரை ஒதுங்கி உயிரிழந்து கிடந்துள்ளன. 

'திமிங்கிலங்கள் கரை ஒதுங்கிய செய்தி கேட்டு உடனடியாக அதிகாரிகளோடு சம்பவ இடத்துக்குச் சென்றோம். அங்கு 150-க்கும் மேற்பட்ட திமிங்கிலங்கள் இறந்து கிடந்தன. அவற்றில் சில உயிருடன் இருந்தது. அவற்றை நாங்கள் மீண்டும் கடலில் கொண்டுபோய் சேர்த்தோம். அப்படியிருந்தும் நூற்றுக்கணக்கான திமிங்கிலங்கள் இறந்துவிட்டன' என ஸ்டீவர்ட் தீவின் பாதுகாப்பு நடவடிக்கை மேலாளர் ரென் லெப்பென்ஸ் கூறியுள்ளார். 

இதேபோன்று இந்த ஆண்டில் நடக்கும் 85-வது சம்பவம் இதுவாகும். இவை அனைத்தும் சனிக்கிழமை இரவு கரை ஒதுங்கியிருக்கலாம். நீண்ட நேரம் உயிருக்குப் போராடிய நிலையில் இவை நேற்று உயிரிழந்திருக்கக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,69,986.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.