Show all

7வது சம்பள கமிஷன் தனது அறிக்கையை தாக்கல் செய்யும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது

48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தையும், 55 லட்சம் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தையும் மாற்றி அமைப்பதற்காக நீதிபதி ஏ.கே. மாத்தூர் தலைமையில் 7-வது சம்பள கமிஷனை முந்தைய மன்மோகன் சிங் அரசு அமைத்தது. 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை இப்படி சம்பள கமிஷன் அமைப்பது வழக்கமான ஒன்றாகும்.

இந்த குழு, ஆகஸ்ட் மாத இறுதியில் தனது அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். இதற்காக பல்வேறு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் சிவில், பாதுகாப்பு அமைப்புகளிடம் ஊதிய குழு ஆலோசனை நடத்தியது. அடுத்த மாதம் ஊதிய கமிஷனின் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று அதன் தலைவர் நீதிபதி ஏகே மாத்தூர் அறிவித்திருந்த நிலையில், 7 வது சம்பள கமிஷன் தனது அறிக்கையை தாக்கல் செய்யும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 4 மாத காலம் அதாவது டிசம்பர் 31 ஆம் தேதி வரை இதற்கான கால அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது. இதற்கான முடிவு பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

7வது ஊதிய கமிஷனின் பரிந்துரைகள் வரும் ஜனவரி 1 ஆம் தேதி 2016 ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.