Show all

சிகிச்சை அளித்து காப்பாற்றிய டாக்டருக்கு ஹேமமாலினி விருந்து

நடிகையும் பா.ஜனதா எம்பியுமான ஹேமமாலினியின் கார் கடந்த மாதம் விபத்து ஒன்றில் சிக்கிய போது அவருக்கு சிகிச்சை அளித்து காப்பாற்றிய டாக்டருக்கு விருந்து கொடுத்தார;. ராஜஸ்தானில் நடந்த விபத்தில் நடிகை ஹேமமாலினியும் படுகாயம் அடைந்தார். படுகாயம் அடைந்த ஹேமமாலினியை அந்த வழியாக காரில் வந்த சிவ்குமார் சர்மா என்பவர் மீட்டு அவரை ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தார்.

தற்போது முழுவதும் குணம் அடைந்த நடிகை ஹேமமாலினி தன்னை விபத்தில் இருந்து காப்பாற்றிய மருத்துவரை கவுரவிக்க விரும்பினார். இதையடுத்து அவர் டாக்டர் சிவ்குமார் சர்மாவை தொடர்பு கொண்டு தனது வீட்டிற்கு வரும்படி அழைப்பு விடுத்தார்.இந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட அவர் ஜூகுவில் உள்ள நடிகை ஹேமமாலினியின் வீட்டுக்கு வந்தார். அவரை குடும்பத்தினருடன் சேர்ந்து வரவேற்ற நடிகை ஹேமமாலினி, டாக்டர் சிவ்குமார் சர்மாவிற்கு அறுசுவை விருந்து அளித்தார்.பின்னர் தன்னை விபத்தின்போது மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்ததற்காக நன்றி தெரிவித்து கொண்டார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.