Show all

பிரமோற்சவத்தில் கலந்து கொள்ள உலகம் முழுவதும் உள்ள பக்தர்கள்...

திருப்பதி அரசு போக்குவரத்துக்கழக மண்டல மேலாளர் அலுவலகத்தில் மண்டல மேலாளர் நாகசிவடு நிருபர்ககளிடம் கூறியதாவது:திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் வருடாந்திர பிரமோற்சவம் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்தாண்டு செப்டம்பர் 16ம் தேதி முதல் 26ம் தேதி வருடாந்திர பிரமோற்சவம் நடக்கிறது.மேலும், அக்டோபர் மாதம் 14ம் தேதி முதல் 24ம் தேதி வரை வருடாந்திர நவராத்திரி பிரமோற்சவமும் நடைபெற உள்ளது. இந்த பிரமோற்சவத்தில் கலந்து கொள்ள உலகம் முழுவதும் உள்ள பக்தர்கள் அதிகளவில் வருவார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது.எனவே, பக்தர்கள் வசதிக்காக இந்த ஆண்டு கூடுதலாக 512 பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

இதன் மூலம் ஒரு நாளைக்கு 3 ஆயிரத்து 500 முறை பஸ்கள் இயக்கப்படும். மேலும், தேவை ஏற்பட்டால் கூடுதலாகவும் பஸ்கள் இயக்கப்படும். இதற்காக பஸ்களில் உறுதி தன்மை, பராமரிப்பு செய்யும் பணி நடந்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.