Show all

278 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்திய அணி

இந்தியா- இலங்கை அணிகளுக்கிடையேயான 2-வது டெஸ்ட் போட்டி பி. சாரா மைதானத்தில் நடைபெற்றது . இதில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 393 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. ராகுல் (108), கோலி (78), சர்மா (79), சஹா (56) ஆகியோர் சிறப்பாக விளையாடி ரன் குவிக்க காரணமாக இருந்தனர்.

பின்னர் முதல் இன்னிங்க்ஸை ஆடிய இலங்கை அணி 306 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. இலங்கை அணியில் அதிகபட்சமாக மேத்யுஸ் 102 ரன்களும் திரிமன்னே 62 ரன்களும் குவித்தனர். இந்திய அணி சார்பில் மிஸ்ரா 4 விக்கெட்டுகளையும் அஸ்வின்,சர்மா தலா 2 விக்கெட்டுகளையும் பின்னி, யாதவ் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

அதன் பின்னர் 87 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்க்ஸை ஆடிய இந்திய அணி 325 ரன்னுக்கு டிக்ளேர் செய்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரஹானே 126 ரன்களும் முரளி விஜய் 82 ரன்களும் குவித்தனர். இலங்கை அணி தரப்பில் கௌசல் மற்றும் பிரசாத் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அதை தொடர்ந்து 412 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு ஆடிய இலங்கை அணி 135 ரன்களுக்கு அணைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இந்திய அணி 278 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது. இந்திய அணி தரப்பில் அஸ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஆட்ட நாயகன் விருது லோகேஷ் ராகுலுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய அணியின் புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ள விராட் கோலி தலைமயிலான அணி பெற்ற முதல் வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.