மகாராணியாக நடிக்க அனுஷ்கா வீட்டில் ஒத்திகை

தொடர்ந்து மகாராணி வேடங்களில் நடிப்பது பற்றி அனுஷ்கா கூறியதாவது: எனக்கு மட்டும் எப்படி மகாராணி வேடங்கள் தொடர்ந்து கிடைக்கிறது என்று பலரும் ஆச்சரியப்படுகிறார்கள். அந்த ஆச்சரியம் எனக்கே கூட ஏற்படுகிறது. இதுபோல் ஒரு பவர்புல் வேடத்தை தொடங்கி வைத்த படம் ‘அருந்ததி’. முதலில் இந்தப் படத்தில் நடிக்க தயங்கினேன். பிறகு அதன் கதையும், கேரக்டரும் என்னை மாற்றி விட்டது. பிறகு வந்த ‘பாகுபலி’ படத்திலும் மகாராணி வேடம்தான். ஆனால், முதல் பாகத்தில் நான் அடிமை போல் இருக்கும் பகுதிகள் இடம்பெற்றன. அடுத்த பாகத்தில் முழுமையான நடிப்பு வெளிப்படும்.

‘ருத்ரமாதேவி’ படத்தைப் பெரிதும் எதிர்பார்க்கிறேன். இதிலும் மகாராணி வேடம் ஏற்றுள்ளேன். கமர்சியல் படங்களிலும் நடித்துக்கொண்டு, இதுபோல் சரித்திரப் படங்களிலும் நடிப்பது வித்தியாச மான அனுபவமாக இருக்கிறது. ஆனால், மகாராணி வேடத்துக்கு நிறைய ஹோம் ஒர்க் செய்ய வேண்டும். தன்னம்பிக்கையும், தைரியமும் இருந்தால்தான் இதுபோன்ற வேடத்தில் நடிக்க முடியும். இப்போது நடித்து வரும் ‘இஞ்சி இடுப்பழகி’ படமும் திருப்புமுனையாக அமையும்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.