Show all

கீர்த்தியை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக வேறு ஹீரோயின்

இது என்ன மாயம் படத்தின் மூலம் அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். இப்படம் வெளிவருவதற்கு முன்பே கைநிறைய படங்கள் குவிந்தன. சிவகார்த்திகேயனுடன் ரஜினிமுருகன், ஜீவாவுடன் கவலை வேண்டாம், பாபி சிம்ஹாவுடன் பாம்பு சட்டை படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தனுஷ் நடிக்க பிரபு சாலமன் இயக்கும் புதிய படத்திலும் கீர்த்தி நடிப்பதாக தகவல் பரவியது. இதன் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கிவிட்டது. ஆனால் கீர்த்தியால் கால்ஷீட் ஒதுக்க முடியவில்லையாம்.

இதையடுத்து அவருக்கு பதிலாக வேறு ஹீரோயினை தனுஷ் ஜோடியாக நடிக்க வைக்க இயக்குனர் எண்ணி உள்ளார். வேறு ஹீரோயின் தேடுதல் நடப்பதாக பட தரப்பில் கூறப்படுகிறது. லிங்குசாமி தயாரிக்கும் ரஜினி முருகன் படத்தில் கீர்த்தி நடித்துள்ள நிலையில் அடுத்து விஷால் நடிக்க தான் இயக்க உள்ள சண்டக்கோழி 2ம் பாகம் படத்திலும் கீர்த்தியை நடிக்க வைக்க லிங்குசாமி எண்ணி இருந்தார். விரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. அதற்கு ஏற்ப கீர்த்தியால் கால்ஷீட் ஒதுக்க முடியவில்லை என்று தெரிகிறது. எனவே அப்படத்திலும் கீர்த்தியை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக வேறு ஹீரோயினை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.