Show all

பாண்டம் படத்துக்கு தடை விதிக்க வேண்டும்

மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களை மையமாக வைத்து பாண்டம் என்ற பெயரில் இந்தி சினிமாப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. சயீப் அலிகான், கேத்ரீனா கைப் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். கபீர் கான் இயக்கி உள்ளார். இந்தப் படம் 28-ந் தேதி வெளியாக உள்ளது.

இந்த நிலையில், மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தின் நிறுவனரும், தற்போதைய ஜமாத் உத் தாவா அமைப்பின் தலைவருமான ஹபீஸ் சயீத், தனக்கும் தனது இயக்கத்துக்கு எதிராகவும் மோசமான கருத்துக்களை பரப்புவதால் பாண்டம் படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று லாகூர் உயர;நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

இது தொடர்பாக பதில் அளிக்க பாகிஸ்தான் அரசுக்கு லாகூர் உயர்நீதிமன்றத்தில் உத்தரவிட்டது. இந்தப் படத்தை வெளியிடும் என்ணம் இல்லை என பாகிஸ்தான் அரசு பதில் மனு தாக்கல் செய்தது.இதையடுத்து இந்தப் படத்தை பாகிஸ்தானில் வெளியிட தடை விதித்து லாகூர் உயர்நீதிமன்றத்தில் நேற்று உத்தரவிட்டது. இந்த தகவலை ஹபீஸ் சயீத்தின் வக்கீல் தெரிவித்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.