Show all

ஓய்வு பெறுகிறார் கிறிஸ் ரோஜர்ஸ்

ஆஸ்திரேலியா வீரர் மைக்கேல் கிளார்க்கை தொடர்ந்து தொடக்க வீரர் கிறிஸ் ரோஜர்ஸும் ஆஷஸ் தொடருடன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இங்கிலாந்துடனான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரை 4 போட்டிகள் முடிவடைந்திருக்கும் நிலையில், 3-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி இழந்துள்ளது. மீதமுள்ள ஒரு போட்டியுடன் மைக்கேல் கிளார்க் ஓய்வு பெறப்போவதாக அறிவித்திருந்தார். இந்நிலையில், அந்த அணியின் தொடக்க வீரரான கிறிஸ் ரோஜர்ஸும் ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ”கடந்த 2 ஆண்டுகளாக ஆஸ்திரேலியா அணியில் மகிழ்ச்சியுடன் அற்புதமாக விளையாடியுள்ளதை, இந்நேரம் நினைத்துப் பார்க்கிறேன். மேலும், சில அழகான சிறப்பு விஷயங்களை ஒரு பகுதி அனுபவித்திருக்கிறேன். ஆனால், எல்லாமுமே கடைசிவரை வருவதில்லை. நான் உண்மையிலேயே, அதிர்ஷ்டம் கொண்டவன்.

இங்கிலாந்துடனான ஆஷஸ் தொடரை வெல்லும் முனைப்போடு இங்கு வந்தோம். ஆனால், அது முடியவில்லை. இங்கிலாந்து வீரர்கள் தங்களுடைய சிறப்பான ஆட்டத்தால், தொடரை தங்கள் பக்கம் திருப்பிவிட்டனர். நான் சிறிது வித்தியாசத்துடன், நன்றான முறையில் விளையாடியுள்ளேன் என்பதை நினைக்கும் பெருமையாக உணர முடிகிறது” என்று தெரிவித்துள்ளார்.

கிறிஸ் ரோஜர்ஸ் ஆஸ்திரேலியா அணிக்காக 24 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். 5 சதங்கள், 14 அரைச் சதங்களுடன் 1972 ரன்கள் குவித்துள்ளார். அதிகப்பட்சம் 173 ரன்களாகும். மேலும், 15 கேட்சுகளையும் பிடித்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.