ஒரு தலை ராகம், கிழக்கே போகும் ரயில் படங்கள் ரயில் பின்னணியில் காதல் கதையாக படமானது. அதைத் தொடர்ந்து இன்றுவரை பெரும் பாலான கிளைமாக்ஸ் ரயில் நிலையத்திலேயே படமாகிறது. அந்த சென்டிமென்ட்டுடன் மற்றொரு காதல் கதையாக உருவாகிறது சிக்கிக்கு சிக்கிக்கிச்சு’. டைட்டிலை கொஞ்சம் கூர்ந்து படிக்க வேண்டிய இக்கதைபற்றி இயக்குனர் என்.ராஜேஷ்குமார் கூறியது: இதுவொரு ரொமான்டிக் பயண கதை. பல படங்களில் ஆக்ஷன் அல்லது காதல் காட்சிகளை ரயிலில் எடுத்திருப்பார்கள். ஆனால் ஒரு முழுபடமும் ஓடும் ரயிலிலேயே படமாக்குவது இதுதான் முதல்முறை. மிதுன் ஹீரோ. மிருதுளா ஹீரோயின். முக்கிய வேடத்தில் ஆதவன் நடிக்கிறார். அனூப் அரவிந்த், அஞ்சலி தேவி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு என்.எஸ்.ராஜேஷ்குமார். விஜய் பெஞ்சமின் இசை. கே.சுந்தர்ராஜன், கே.பாலசுப்ரமணியன், என்.ராஜேஷ்குமார் தயாரிப்பு.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.