Show all

மங்கள்யான் விண்கலத்தால் எடுக்கப்பட்ட செவ்வாய்க் கிரகத்தின் முப்பரிமாண படம்

மங்கள்யான் விண்கலத்தால் எடுக்கப்பட்ட செவ்வாய்க் கிரகத்தின் முப்பரிமாண படம்: இஸ்ரோ வெளியிட்டது இந்திய விண்வெளி ஆய்வு மையம் மங்கள்யான் விண்கலத்தால் எடுக்கப்பட்ட செவ்வாய்க் கிரகத்தின் முப்பரிமாண படத்தை வெளியிட்டுள்ளது. இந்தியா செவ்வாய்க் கிரகத்திற்கு தனது செயற்கைக் கோளை 2014 செப்டம்பர் மாதத்தில் அனுப்பியது.

ஜுலை மாதத்தில் மங்கள்யான் எடுத்த இந்தப் புகைப்படம், செவ்வாய்க் கிரகத்தில் இருக்கும் ஓஃபிர் சஸ்மா என்ற பள்ளத்தாக்கு என்றும் இந்தப் படம், 1,857 கி.மீட்டர் உயரத்திலிருந்து எடுக்கப்பட்டதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. முதல் முயற்சியிலேயே செவ்வாய்க் கிரகத்திற்கு விண்கலத்தை அனுப்பிய முதல் நாடு என்ற சாதனையை இந்தியா படைத்தது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.