Show all

கேல் ரத்னா விருதுக்கு சானியா மிர்சா பெயர் பரிந்துரை

இந்தியாவின் பிரபல டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சாவின் பெயர் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மதிப்புமிக்க இந்த விருதுக்கு லியாண்டர் பயசுக்கு பிறகு பரிந்துரை செய்யப்பட்டுள்ள டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாதான் ஆவார்.

பெண்கள் இரட்டையர் பிரிவில் தரவரிசையில் தற்போது முதலிடம் வகிக்கும் சானியா மிர்சா, விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் முதல் முறையாக இரட்டையர் பிரிவில் மார்டினா ஹிங்கிஸுடன் இணைந்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். 28 வயதான சானியா மிர்சா மூன்று கலப்பு இரட்டையர் கிர்ன்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார்.

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு, விளையாட்டுத்துறை அமைச்சகத்தால் அமைக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற நீதிபதி விகே பாலி தலைமையிலான குழு சானியா மிர்சாவின் பெயரை பரிந்துரைத்துள்ளது. இந்த பரிந்துரை விளையாட்டு துறை அமைச்சகத்துக்கு அனுப்பபடும். பின்னர் விளையாட்டுத்துறை மந்திரி சர்பானந்தா சோனோவால் கையெழுத்திட்ட பிறகு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

இதைதொடர்ந்து இந்த விருது வரும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி தேசிய விளையாட்டு தினத்தன்று ஜனாபதி பிரணாப் முகர்ஜியால் வழங்கப்படும். விளையாட்டுத்துறையில் வழங்கப்படும் உயரிய விருது கேல் ரத்னா விருதுதான் ஆகும். கேல் ரத்னா விருது பெறுபவர்களுக்கு சான்றிதழுடன் ரூ 7.5 லட்சம் பரிசுத்தொகையும் வழங்கப்படும்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.