Show all

கஜினி திரைப்படத்தில் வருவது போல அவருடைய நிஜவாழ்க்கையிலும் செல்போன் நிறுவன உரிமையாளரைக் காத

கஜினி திரைப்படத்தில் செல்போன் நிறுவன உரிமையாளரைக் காதலித்தது போல அவருடைய நிஜவாழ்க்கையிலும் செல்போன் நிறுவன உரிமையாளரைக் காதலித்துள்ளார் அசின்.

மைக்ரோமேக்ஸ் செல்போன் நிறுவனத்தின் இணை நிறுவனர் ராகுல் சர்மாவும் (36) அசினும் (29) கடந்த சில வருடங்களாக காதலித்து வருகிறார்கள். இதனையடுத்து விரைவில் திருமணம் செய்ய இருவரும் முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அசின் பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது: என்னுடைய எல்லா சினிமா வேலைகளையும் முடித்துக்கொண்டு வருகிறேன். அப்போதுதான் என்னால் என் சொந்த வாழ்க்கைக்கு நேரம் ஒதுக்கமுடியும். கடந்த இரண்டு வருடங்களாக புதுப்படங்களில் நடிக்க ஒப்புக்கொள்வதில்லை என்று கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து அவர் தன்னுடைய காதலர் ராகுல் சர்மாவை விரைவில் திருமணம் செய்யவுள்ளார் எனத் தெரிகிறது

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.