Show all

அதிநவீன பிரமோஸ் ஏவுகணைக்கு அப்துல் கலாம் பெயர் மத்திய அரசு

டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாமிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்தியாவின் அடுத்த தலைமுறை பிரம்மோஸ் அதிவேக ஏவுகணைக்கு அவருடைய பெயரை சூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.இது குறித்து பேசிய பிரம்மோஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுதிர் குமார் மிஸ்ரா, அதிவேக ஏவுகணைக்கு கலாமின் பெயர் சூட்ட முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ஒலியை விட ஏழு மடங்கு சக்திவாய்ந்த இந்த பிரம்மோஸ் அதிவேக ஏவுகணை, பதுங்கு குழிகள் மற்றும் ஆயுதம் சேமிப்பு வசதிகள் போன்ற கடினமான இலக்குகளை தாக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்படுகிறது. இந்த ஏவுகணையை பிரம்மோஸ் இரண்டாம் (கே) என்று அழைக்க பிரம்மோஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதில், கே கலாமை குறிக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது உள்ள பிரம்மோஸ் ஏவுகணை தான் உலகின் மிக வேகமான அதிவேக ஏவுகணை என்பது குறுப்பிடத்தக்கது.

பிரம்மோஸ் ஏவுகணையின் முதல் சோதனை ஓட்டம் 2001-ம் ஆண்டு நடைபெற்ற போது அதில் கலந்துகொண்ட கலாம், இந்தியா தாயரித்த ஏவுகணைகளை பற்றி பல தகவல்களை பகிர்ந்துகொண்டார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.