Show all

தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் காக்க கட்சத் தீவை மீட்டுத் தாருங்கள்

சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடியிடம், தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று வழங்கிய கோரிக்கை மனுவில், தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் காக்க கட்சத் தீவை மீட்டுத் தாருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

அந்தக் கோரிக்கை மனுவில், கட்சத் தீவு என்பது மிகச் சிறிய தீவாகும். அது 285 ஏக்கர் நிலப்பரப்பு கொண்டது. இந்த கட்சத் தீவு ராமநாதபுரத்தின் மன்னருக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளன. கட்சத் தீவினால், தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பு தொழில் எளிதாக இருந்தது.

ஆனால், 1974 முதல் 1976ம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட ஒப்பந்தத்தின்படி, கட்சத் தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டது.

இதனால், தமிழர்களின் மீன்பிடி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டு, அவர்களது வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே, பிரதமர் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு, 1974 மற்றும் 1976 ஒப்பந்தங்கள் செல்லாததாக அறிவித்து தமிழர்களுக்கு சொந்தமான கட்சத் தீவை மீட்டுத்  தாருங்கள் என்று வலியுறுத்தியுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.