Show all

60 ரன்களுக்கு சுருண்டது ஆஸ்திரேலியா

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 169 ரன்கள் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா அணி 495 ரன்கள் வித்தியாசத்திலும் . மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது. இந்நிலையில் நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று நாட்டிங்காமில் தொடங்கியது.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக காணப்பட்ட இந்த மைதானத்தில் முதலில், பேட் செய்த ஆஸ்திரேலிய அணியை இங்கிலாந்து அணி வீரர்கள் நிலைகுலைய செய்தனர்.குறிப்பாக இங்கிலாந்து பந்து வீச்சாளர் ஸ்டுவார்ட் பிராட் பந்து வீச்சில் அனல் பறந்தது. அவரது பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேறியதால் ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 60 ரன்னில் சுருண்டது. ஹசில்வுட் 4 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார்.

1898-ம் ஆண்டுக்குப் பிறகு ஆஸ்திரேலியா உணவு இடைவேளைக்கு முன்னதாக அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது இதுதான் முதல் முறையாகும். ஸ்டூவர்ட் பிராட் 9.3 ஓவர்கள் வீசி 5 மெய்டன்களுடன் 15 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். இதையடுத்து தனது முதல் இன்னிங்சை இங்கிலாந்து அணி ஆடி வருகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.