Show all

பரவை முனியம்மாவின் வறுமையை போக்கிய தனுஷ்.

உடல் நலம் சரியில்லாமலிருந்த பரவை முனியம்மாவுக்கு உடனடியாக ஐயாயிரம்(?) கொடுத்து இகழ் தேடிக் கொண்டார் விஷால்.

மாதந்தோறும் அவருக்கு ஐயாயிரம் வழங்கப்படும் என்று அவர் அடிஷனல் பிட்டாக அறிவித்திருந்தாலும், ‘அட... இவ்ளோ பெரிய சம்பளம் வாங்கும் ஆர்ட்டிஸ்ட் இப்படியா சொதப்புவாரு?’ என்று கிழித்து தொங்க விட்டு விட்டார்கள் சமூக வலைதளங்களில். வரும் நடிகர் சங்க தேர்தலில் விஷால் கோஷ்டியை எதிர்த்து நிற்பார் என்கிற ஹேஷ்யத்தில் சிக்கியிருக்கும் தனுஷ், இந்த அருமையான சந்தர்ப்பத்தை அழகாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். பரவை முனியம்மாவின் வறுமை போக்கும் விதத்தில் ஐந்து லட்சத்தை அள்ளி வழங்கியிருக்கிறார். அப்துல் கலாம் மறைவு தினத்தன்று தனது பிறந்த நாளை சரக்கடித்து கொண்டாடி, சமூக வலை தளங்களில் சகட்டு மேனிக்கு நொறுக்கப்பட்ட தனுஷ், இந்த பரவை முனியம்மா விஷயத்தில் முந்தைய அழுக்கை ஒரேயடியாக ரின் போட்டு வெளுத்துக் கொண்டார். பரவையால் ஒருத்தருக்கு சிறகு அவுட், இன்னொருத்தருக்கு எக்ஸ்ட்ரா சிறகுகள்.... இதாண்டா விதி?

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.