Show all

ஆளில்லா விமான தாக்குதலை முறியடிக புதிய தொழில்நுட்பம் அமெரிக்கா

எதிரிகளின் ஆளில்லா விமான தாக்குதலை முறியடிக்கும் புதிய தொழில்நுட்பத்தை அமெரிக்க ராணுவம் செயல்படுத்திக் காட்டியுள்ளது.தீவிரவாதிகளை ஒழிக்க தற்போது ஆளில்லா விமான தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இத்தகைய தாக்குதலை எதிரிகள் நடத்தினால் அதனை முறியடிக்கும் புதிய தொழில்நுட்பத்தை அமெரிக்க ராணுவம் கண்டுபிடித்துள்ளது.

இந்த தொழில் நுட்பத்தை அமெரிக்க நிறுவனம் செயல்முறை விளக்கம் செய்து காட்டியுள்ளது. கலிபோர்னியாவின் POINT MUGU என்ற இடத்தில் உள்ள விமான தளத்தில் Black Dart என்ற பெயரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பறந்து சென்ற இத்தகைய குட்டி விமானத்தை ரேடார்கள் உதவியுடன் கண்காணித்த நிபுணர்கள் தரையிறக்கினர்.ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் மட்டுமின்றி 50 க்கும் மேற்பட்ட கணினி உதவியுடன் செய்து காட்டப்பட்ட இந்த செயல் விளக்கம் புதிது என்றாலும் இத்தகைய தாக்குதல்களை நடத்தும் போது கவனத்துடன் கையாள வேண்டும் என அமெரிக்க ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.