Show all

V.S.O.P. படத்திற்கு U சர்டிபிகட்

ஆர்யா, சந்தானம், தமன்னா நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’. இந்த படம் V.S.O.P. என்று அழைக்கப்பட்டு வருகிறது. இப்படத்தை ராஜேஷ் இயக்கியிருக்கிறார். இமான் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர்கள் ரசிகர்களிடையே அதிகம் வரவேற்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இப்படத்தை தணிக்கை குழுவிற்கு அனுப்பியிருந்தார்கள். படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் ‘U’ சர்டிபிகட் வழங்கியிருக்கிறார்கள். இதையடுத்து இப்படத்தை ஆகஸ்ட் 14-ம்தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளனர்.

‘U’ சர்டிபிகட் குறித்து இயக்குனர் ராஜேஷ் கூறும்போது, “V.S.O.P. படத்திற்கு ‘U’ சர்டிபிகட் கிடைத்தள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. எனது முந்தைய படங்களை போன்று இப்படமும் முழுக்க முழுக்க காமெடி நிறைந்திருக்கும், குடும்பத்துடன் பார்த்து மகிழக் கூடிய ஒரு படமாய் இருக்கும். படத்தின் பாடல்களும் டிரைலரும் அனைத்து விதமான ரசிகர்களுக்கும் பிடித்திருப்பது கூடுதல் மகிழ்ச்சி.” என்றார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.