Show all

இசையமைப்பாளருக்கு சம்பளம் ஒரு கோடி

ஒருபுறம் தயாரிப்பு செலவை குறை... சம்பளத்தை குறை... என்று தொண்டை தண்ணி வற்ற சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்

சினிமா நலம் விரும்பிகள். ஆனால் பின்வரும் தகவலை கேட்டால் தொண்டை தண்ணியாவது... தொவரம் பருப்பாவது... என்கிற அளவுக்கு ஆத்திரம் வரும். வேறொன்றுமில்லை. மிக மிக தரமான படங்களுக்கு மட்டும் இசையமைத்து வரும் சந்தோஷ் நாராயணன், இப்போது தமிழ்சினிமாவில் முக்கியமான மியூசிக் டைரக்டர். நாற்பது ஐம்பது லட்சங்களை தாண்டாமல் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த அவருக்கு திடீரென அவர் கேட்காமலே ஒரு கோடி ரூபாய் கொடுத்திருக்கிறார் ஒருவர். பிரபல அரசியல் வாரிசு, எதை கேட்டாலும் ஓ.கே ஓ.கே என்று சொல்கிற மனசுள்ளவர் என்றாலும் இந்த தொகையைதான் பின்னால் வருகிறவர்களும் கொடுக்க வேண்டி வருமே என்று அவர் நினைக்கவில்லையே? பிறகெப்படி பாராட்டுவதாம்?

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.