Show all

​கலாமின் இறுதிச் சடங்கில் பங்கேற்க இயலவில்லை விளக்கம் - ஜெயலலிதா

அப்துல் கலாமின் இறுதிச் சடங்கில், நிதியமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையிலான தமிழக அமைச்சர்கள் குழு பங்கேற்கும் என முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அப்துல் கலாம் மீது தமக்கு மிகுந்த அன்பும், மரியாதையும் உண்டு என தமிழக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்று, மரியாதை செலுத்த வேண்டும் என்பதே தமது விருப்பம் என்றாலும், உடல் நிலை காரணமாக தம்மால் ராமேஸ்வரத்திற்கு பயணம் மேற்கொள்ள முடியவில்லை என்றும் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

எனவே, தமது சார்பாகவும், தமிழக அரசின் சார்பாகவும், அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், ஆர்.வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, பி.பழனியப்பன், எஸ்.சுந்தர்ராஜ், ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் ராமேஸ்வரம் சென்று கலாமின் இறுதிச்சடங்கில் பங்கேற்பார்கள் என முதலமைச்சர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார். கலாமின் உடலை அடக்கம் செய்வதற்காக தமிழக அரசின் சார்பில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.