Show all

தமிழகப் போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடி பதவி நீக்கம்

தமிழகப் போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடியாகப் பதவி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.செந்தில் பாலாஜியை போக்குவரத்துத் துறை அமைச்சர் பதவியிலிருந்து விலக்கி வைக்க முதல்வர் ஜெயலலிதா பரிந்துரை செய்ததன் பேரில், அவரை பதவிலிருந்து நீக்கி ஆளுநர் ரோசையா நடவடிக்கை எடுத்துள்ளார்.

இந்தப் பதவியை தொழில் துறை அமைச்சராக இருக்கும் தங்கமணி கூடுதலாகக் கவனித்துக் கொள்வார் என்று அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.கரூர் அதிமுக செயலாளர் பதவிலிருந்தும் செந்தில் பாலாஜி நீக்கப் பட்டுள்ளார் என்பதுக் குறிப்பிடத் தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.