Show all

திரிஷா அரசியலுக்கு வரமாட்டாராம்.

சமீப காலமாக நடிகைகள் அரசியலுக்கு வருவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ராதிகா, குஷ்பு, ரோஜா, விந்தியா, ஜெயப்பிரதா, ஜெயசுதா, குயிலி, குத்துரம்யா, விஜயசாந்தி, ஹேமமாலினி என பலர் கட்சிகளில் இணைந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அந்த வரிசையில் திரிஷாவும் அரசியலில் ஈடுபட உள்ளதாக செய்திகள் வெளியானது. அதை திரிஷா மறுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறும் போது, ‘‘நான் அரசியலில் ஈடுபட இருப்பதாக தவறான செய்திகள் பரவியுள்ளது. நான் அரசியலில் ஈடுபடமாட்டேன்.

இப்போது மட்டும் அல்ல எப்போதும் அரசியலுக்கு வரமாட்டேன்’என்றார்.

திரிஷா தற்போது கமலுடன்இணைந்து ‘தூங்காவனம்’ படத்தில்நடித்து வருகிறார். இந்த படத்தை கமலின் உதவியாளர் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடியவுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.