Show all

பெரியதிரைக்கு சின்னத்திரை பதிலடி.

ஏன், உங்களுக்கு தான் தடைபோடத்தெரியுமா? எங்களுக்குதெரியாதா? என்று மொத்தமாக, பதிலடிக்கு- கிளம்பிவிட்டது தொலைகாட்சி வட்டாரம்.

படம் வாங்காத எந்த தொலைக்காட்சிக்கும் பாடல்களோ, நகைச்சுவைக்காட்சிகளோ, ட்ரெய்லரோ இல்லை என்று திட்டவட்டமாக அறிவித்து விட்டார்கள். இந்த முடிவால் எல்லா தொலைக்காடசிகளும் அடித்து பிடித்துக் கொண்டு அய்யோ குய்யோ ஆவார்கள் என்று எதிர்பார்த்தால், எல்லாரும் திரும்பி ஓடத் தொடங்கி விட்டார்கள். இந்தவிஷயத்தில் முன்னணி பின்னணி நடுவணி தொலைக்காட்சிகள் அத்தனைபேரும் ஒன்றுகூடி, பெரியதிரைக்கே முழுக்கு போட்டு விட்டார்கள்.

இந்த ஆண்டு முழுக்க எந்ததொலைக்காட்சியும் எந்தப்படத்தையும் வாங்கக்கூடாது என்பதுதான் சின்னத்திரை வட்டார முடிவாம். விக்கித்துப் போயிருக்கிறது தயாரிப்பாளர்சங்கம். விடை என்னாகுமோ? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.