Show all

ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக களமிறங்கியது துருக்கி விமானப்படை

சிரியா மற்றும் ஈராக்கின் பல்வேறு பகுதிகளை தங்களதுவசம் கொண்டு வந்து உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளின் உலக படைகள் தாக்குதல் நடத்தி வருகிறது. சமீபத்தில் இங்கிலாந்து அங்கு வான்வழி தாக்குதலை நடத்தியது. இதை தொடர்ந்து துருக்கியும் களமிறங்கி உள்ளது. துருக்கி விமானப்படைக்கு சொந்தமான விமானங்கள், சிரியாவின் வான்பகுதிக்கு செல்லாமலே தீவிரவாதிகளை குறிவைத்து தாக்குதலை நடத்திஉள்ளது.

துருக்கியின் எப்-16 ரக விமானங்கள் வெற்றிகரமாக சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியது என்று அந்நாட்டு பிரதமர் அக்மத் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.துருக்கியை, ஐ.எஸ். தீவிரவாதிகள் குறிவைத்த நிலையில் அந்நாட்டு ராணுவம் அதிரடி நடவடிக்கையை தீவிரப்படுத்திஉள்ளது.

சிரியாவின் எல்லையிலுள்ள இரண்டு விமானப்படை தளங்களை பயன்படுத்த துருக்கி அமெரிக்காவிற்கு அனுமதிவழங்கி உள்ளது. ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக ஏவுகணைகளை வீசவும், அதிரடி வான்வழி தாக்குதலை நடத்தவும் இரண்டு விமானப்படை தளங்களை பயன்படுத்த துருக்கி அனுமதி அளித்து உள்ளது.

மேலும் உள்நாட்டிலும் பல ஐ.எஸ். ஆதரவாளர்களை துருக்கி ராணுவம் கைது செய்து உள்ளது

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.