Show all

அமெரிக்காவில் புற்று நோயால் பாதிக்கப்பட்ட 4வயது சிறுமிக்கு திருமணம்

அமெரிக்காவில் புற்று நோயால் பாதிக்கப்பட்ட 4வயது சிறுமிக்கு அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் பணியாற்றும் ஆண் செவிலியருடன் திருமணம் நடந்தது. நியூயோர்க் நகரில் மெலோடிஸ் செண்டர் என்ற குழந்தைகளுக்கான புற்று நோய் மருத்துவமனை உள்ளது. இங்கு 4 வயது ஆன அப்பி சாய்லெஸ் என்ற சிறுமி இரத்தப் புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வருகிறார்.

சிறுமி அப்பி சாய்லெஸ் சிகிச்சை பெற்றுவரும் வார்டில் ஆண் நர்சாக பணியாற்றி வரும் மேட் ஹிக்லிங்கின் அன்பான உபசரிப்பால் அப்பிக்கு அவரை நன்கு பிடித்துப் போய்விட்டது. அப்பி தனது தாயாரிடம் ஹிக்லிங்கை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும் தெரிவித்தார். இதற்கு ஹிக்லிங்க்கும் சம்மதிக்க மருத்துவமனையிலுள்ளவர்கள் அனைவரும் சேர்ந்து இந்தத் திருமணத்திற்கு 24 மணி நேரத்தில் ஏற்பாடுகளை செய்து முடித்தனர்.இதையடுத்து அப்பி ஹிக்லிங் திருமணம் மருத்துவமனை ஊழியர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.