Show all

நேற்று பிரிட்டனின் குட்டி இளவரசருக்கு 2வது பிறந்த நாள்

நேற்று (ஜூலை 22) பிரிட்டனின் குட்டி இளவரசரும் இளவரசர் வில்லியம்ஸ் மற்றும் இளவரசி கேட் ஆகியோரின் மகனும் ஆன ஜோர்ஜ் அலெக்ஸான்டர் லூயிஸின் 2 ஆவது பிறந்த நாளாகும்.

இவரது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் எளிமையான முறையில் அன்மெர் மண்டபத்தில் நடைபெறவுள்ள கொண்டாட்டத்தில் அரச குடும்பத்தைச் சேர்ந்த முக்கியமான உறுப்பினர்கள் மாத்திரமே கலந்து கொள்வர் என்று தெரிய வருகின்றது.சமீபத்தில் பிறந்த குட்டி இளவரசர் ஜோர்ஜின் தங்கையான சார்லொட்டேவின் ஞானஸ்நான வைபவம் ஜுலை 5 ஆம் திகதி இடம்பெற்றது.

அண்மையில் தான் இளவரசர் வில்லியம்ஸ் விமான ஆம்புலன்ஸ் விமானியாகப் பொறுப்பேற்றுக் கொண்டிருந்தார். தற்போது இவர் பகுதி நேர வேலையுடன் குடும்பத்தையும் கவனித்து வருகின்றார்.பொதுவாக இளவரசர் வில்லியம்ஸ் தனது மனைவி மற்றும் குழந்தைகளை ஊடகங்களின் பிடியில் இருந்து விலக்கியே வைத்துள்ள போதும் அவ்வப்போது குட்டி இளவரசர் மற்றும் இளவரசியாரின் கண்ணைக் கவரும் புகைப்படங்களை உத்தியோக பூர்வமாக வெளியிட்டே வருகின்றார்.

இந்நிலையில் குட்டி இளவரசர் ஜோர்ஜ் தனது தாத்தாவான சார்லஸ் மற்றும் தந்தையான வில்லியம்ஸ் ஆகியோரைத் தொடர்ந்து பிரிட்டனின் முடிக்குரிய இளவரசராக 3 ஆவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.