Show all

தூத்துக்குடி கடல் பகுதியில் தத்தளித்த மீனவர்கள் மீட்பு

தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சேர்ந்த அமல்ராஜ் என்பவருக்குச் சொந்தமான ஜெபின் புஷ்பா என்ற நாட்டுப்படகில் 7 மீனவர்கள் கடந்த 14 ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.  18 ஆம் தேதி இரவு வரை 7 பேரும் கரைக்கு வராததால் அவர்களது உறவினர்கள் அச்சமடைந்தனர்.இதற்கிடையே, என்ஜின் பழுது காரணமாக படகு தூத்துக்குடி புதிய துறைமுகத்தில் இருந்து வடகிழக்கே 21 கடல் மைல் தொலைவில் நிற்பதாக படகில் இருந்த மீனவர்கள் சக மீனவர்கள் மற்றும் மீன்வளத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

இது சென்னையில் உள்ள மீன்வளத் துறை இயக்குநர் அலுவலகம் மூலம் கடலோர காவல் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கடலோர காவல் படைக்குச் சொந்தமான அபிராஜ் ரோந்துக் கப்பலில் மீனவர்களை தேடும் பணி நடைபெற்றது. மீனவர்களின் இருப்பிடத்தை அறிந்த கடலோர காவல் படையினர் 7 மீனவர்களையும் பத்திரமாக மீட்டு பழுதான நாட்டுப் படகையும் பத்திராமாக மீட்டு ஞாயிற்றுக்கிழமை மாலை புதிய துறைமுகத்துக்கு அழைத்து வந்தனர். 7 பேரும் திரேஸ்புரம் அழைத்துச் செல்லப்பட்டு அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.