Show all

மின் வாரியம் கடனில் இருப்பதாக விஜயகாந்த் புகார்

கடந்த ஆட்சியில், அதிக விலை கொடுத்து வாங்கியதை குறைத்து, ஒரு யூனிட் மின்சாரத்தை, 5.50 ரூபாய்க்கு வாங்குவதாக, 2012ல், சட்டசபையில் அறிவித்தனர். ஆனால், தற்போது ஒரு யூனிட் மின்சாரத்தை, 12.50 ரூபாய்க்கு வாங்குகிறது.மின் வாரியத்தில் உயர் பதவியில் இருந்த அதிகாரிகள், 10 ஆண்டுகளாக, மின் உற்பத்தி திட்டங்களை, திட்டமிட்டு தாமதப்படுத்தி, அதை காரணமாக்கி, தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்கியுள்ளனர்.
அதனால் தான், பல ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு, மின் வாரியம் கடனில் சிக்கித் தவிக்கிறது.எனவே, முதல்வர் ஜெயலலிதா, இதுகுறித்த உண்மை நிலவரங்களை, மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
சம்பந்தப்பட்ட அமைச்சர் மீதும், அதிகாரிகள் மீதும், துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, விஜயகாந்த் கூறியுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.