Show all

வாலு பட வெளியீட்டிற்கு எதிராக சதி நடக்கிறது ராஜேந்தர்

தமிழகம் முழுவதும், வாலு படத்தை நான் வெளியிடுகிறேன் என, ஜூன், 19ம் தேதியிலிருந்து விளம்பரம் செய்து வருகிறேன். மேஜிக் ரேஸ் நிறுவனம், தாமதமாக வழக்கு தொடர்ந்திருப்பதில் உள்நோக்கம் உள்ளது. தயாரிப்பாளர், நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தியுடன் இந்த நிறுவனம் சார்பில் பேசப்பட்ட பிறகும் ஏதோ மாற்றம் நடந்துள்ளது.

மூன்று ஆண்டுகளாக, சிம்பு படம் வரவில்லை. ஆனால், இந்த படம் வெளிவரக் கூடாது என, சினிமாவில் ஒரு கும்பல் சதி செய்கிறது. இவர்கள் யார் என்பதை தற்போது சொல்ல முடியாது; நேரம் வரும் போது தெரிவிப்பேன்.நீதிமன்றத்தை நாங்கள் மதிக்கிறோம். வரும், 13ம் தேதி, நீதிமன்ற முடிவை ஏற்று செயல்படுவோம் என்றார்.

நடிகர் தனுஷ் நடித்த, 'மாரி' படம் வரும் 17ம் தேதி வெளியாகிறது. இதனால், உங்கள் படத்திற்கு பிரச்னையா என, கேட்டதற்கு, டி.ராஜேந்தர் பதில் சொல்ல தயங்கினார். பின் எங்களுக்கு ஆண்டவன் துணையாய் இருப்பார் என்றார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.