Show all

பாபநாசம் படத்திற்கு கேளிக்கை வரி அளிக்கப்படாதது ஏற்கத்தக்கதல்ல கமல்

பாபநாசம் படத்திற்கு வரி விலக்கு அளிக்காதது ஏற்புடையது அல்ல என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். சமீபத்தில் வெளியான பாபநாசம் படத்தின் வெற்றி விழா சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. இதில், கலந்துகொண்டு பேசியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் நடிகர் சங்கப் பிரச்னை குறித்து தன்னிடம் யாரேனும் அணுகினால் அதற்கான உதவிகளை தான் செய்வேன் என்றும் கமல் தெரிவித்தார். அனைத்து தரப்பினரையும் கவர்ந்துள்ள பாபநாசம் திரைப்படத்திற்கு கேளிக்கை வரி அளிக்கப்படாதது ஏற்புடையது அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.