Show all

வாலு பட வெளியீட்டுக்கு தடை ஐகோர்ட் உத்தரவு

சிம்பு நடிப்பில் வெளியாக இருக்கும் ‘வாலு’ படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. விஜய்சந்தர் இயக்கத்தில் சிம்பு, ஹன்சிகா, சந்தானம் உள்ளிட்ட பலர் நடிப்பில் ஜூலை 17ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டு இருக்கும் படம் ‘வாலு’. நிக் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த படத்தை சிம்பு சினி ஆர்ட்ஸ் வெளியிட இருக்கிறது.

இந்த நிலையில், ‘வாலு’ படத்தின் வெளியீட்டிற்கு தடைக் கோரி உயர் நீதிமன்றத்தில் மேஜிக் ரேஸ் நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில் “தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய நான்கு மாநில வெளியீட்டு உரிமையை எங்களது நிறுவனத்துக்கு ரூ.10 கோடிக்கு 2013-ல் ஒப்பந்தம் செய்தார்கள்.

எனவே அதன் வெளியீட்டு உரிமத்தை எங்களுக்கு தருமாறு அந்நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.