Show all

லக்வி விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராக சீனா செயல்பட்டதற்கு மோடி கவலை

லஷ்கர்-இ-தொய்பா இயக்க பயங்கரவாதி ஜகி-உர்-ரஹ்மான் லக்வி விவகாரத்தில், இந்தியாவுக்கு எதிராக சீனா செயல்பட்டதற்கு, அந்நாட்டு அதிபர் ஜீ ஜின்பிங்கிடம் பிரதமர் நரேந்திர மோடி கவலை தெரிவித்தார்.

பிரிக்ஸ் உச்சி மாநாடு, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்.சி.ஓ) மாநாடு ஆகியவற்றில் பங்கேற்பதற்காக, ரஷியாவின் உஃபா நகருக்குச் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜீ ஜின்பிங்கை புதன்கிழமை சந்தித்துப் பேசினார்.

இந்தச் சந்திப்பின்போது, இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் சுமார் 90 நிமிடங்கள் விவாதித்தனர்.அப்போது, "ஓராண்டில் ஐந்தாவது முறையாக நாம் சந்தித்துக் கொள்வது, இந்தியா-சீனா இடையேயான உறவின் ஆழத்தைக் காட்டுகிறது' என்று ஜீ ஜின் பிங்கிடம் பிரதமர் மோடி கூறினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.