Show all

விஷாலுக்கு ஜோடியாக கேத்ரீன் தெரசா

சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் காஜல் அகர்வாலுடன் இணைந்து நடித்துவந்த ‘பாயும் புலி’ படப்படிப்பு நேற்றுடன் முடிவடைந்தது. இதை முன்னிட்டு படக்குழுவில் உள்ள அனைவருக்கும் விஷால் தங்க நாணயங்களை பரிசாகக் கொடுத்தார் . இந்த படத்தின் முடிவையடுத்து அடுத்ததாக பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார் விஷால். இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ‘மெட்ராஸ்’ நாயகி கேத்ரீன் தெரசா நடிக்க இருக்கிறார்.

’கணிதன்’ படத்தில் அதர்வா முரளி மற்றும் செல்வராகவனின் ‘கான்’ படத்தில் சிம்புவுடன் நடித்துவரும் கேத்ரீன் தெரசா இப்போது விஷாலுடன் ஜோடியாக நடிக்க இருக்கிறார். ’மெட்ராஸ்’ படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டதோடு சிறந்த அறிமுக நடிகைக்கான விஜய் டிவி விருது, விகடன் விருது மற்றும் ஃபிலிம்ஃபேர் உள்ளிட்ட விருதுகளும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.