Show all

‘கெத்து’ படத் தலைப்பு தமிழ் சொல்தான். உயர் நீதிமன்ற நீதிபதி கருத்து

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான ‘கெத்து’ படத் தலைப்பு தமிழ் சொல்தான் என்றும், அருணகிரிநாதர் அருளிய திருப்புகழில் கெத்து என முருகப் பெருமானை குறிப்பிட்டுள்ளார் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

 

படத்தலைப்பான ‘கெத்து’ என்ற சொல் தமிழ்சொல் அல்ல என கூறி படத்துக்கு கேளிக்கை வரிச் சலுகை வழங்க முடியாது என்று தமிழக அரசு கடந்த 14 ஆம் தேதி அரசாணை வெளியிட்டது

 

அதை எதிர்த்து நீதிமன்றத்தில் முறையீடு  செய்த கெத்து தயாரிப்பாளரான உதயநிதி, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்டுள்ள அகராதியில், ‘கெத்து’ என்ற சொல்லுக்கு ‘தந்திரம்’ என்று பொருள் கூறப்பட்டுள்ளது. அதேபோல, க்ரியாவின் தற்கால தமிழ் அகராதியில், கெத்து என்ற சொல்லுக்கு ‘தன்னுடைய உயர்வையும், பெருமையையும் காட்டிக் கொள்ளும் போக்கு’ என்று பொருள் கூறியுள்ளது.

 

எனவே, படத்துக்கு வரிச்சலுகை தர மறுத்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. இந்த மனு நீதிபதி மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது.

 

அப்போது நீதிபதி மகாதேவன், கெத்து என்ற சொல் தமிழ்ச் சொல்தான். அருணகிரிநாதர் பாடிய திருப்புகழில் கெத்து மனம் படைத்த முருகா! என்று பாடியுள்ளார். அந்தச் சொல்லுக்கு செருக்கு, ஆணவம் எனப் பொருள்படும் என்று தெரிவித்தார். மேலும் மனுதாரரின் மனுவுக்கு  தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.

    

 

 

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.